அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: அறிவிப்பு வெளியானது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 01, 2021

Comments:0

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: அறிவிப்பு வெளியானது

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக் காலம் அண்மையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான பணி தொடங்கியது.
இதற்காக மூன்று பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டது. அதில் தமிழக ஆளுநர் சார்பில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், தமிழக அரசின் சார்பில், தமிழக முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் தகுதியும் ஆர்வமும் கொண்டவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு ஜூன் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத் தரவிறக்கம் செய்து விண்ணப்பித்து nodalofficer2021@annauniv.edu என்ற இணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அதிலிருந்து நேர்முகத் தேர்வின் மூலம் மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களிலிருந்து தகுதியான ஒருவரைத் தமிழக ஆளுநர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் தேவை?- https://www.annauniv.edu/pdf/vceligibility.pdf
கூடுதல் விவரங்களுக்கு: https://www.annauniv.edu/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews