பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பை பெறுவதற்காக ஒருவர் மதம் மாறியிருப்பது தெரியவந்தால், அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கவுதமன் என்பவர் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக 2007-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
அப்போது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாததால் கவுதமனை இப்பதவியில் நியமிப்பதாகவும், அவர் ஓராண்டு காலத்துக்குள் நூலக அறிவியல் பட்டத்தைப் பெற வேண்டும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
ஆனால், இப்பதவிக்கான கல்வித்தகுதியை கவுதமன் பெறவில்லை. அதனால் அவரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்று அதே பல்கலைக்கழகத்தில் நூலகப்பிரிவில் பணியாற்றும் ரமேஷ் என்பவர் 2017-ம் ஆண்டு புகார் அளித்தார். பதவி உயர்வு
இந்த புகாரை, பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரித்து, நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரி பதவியை பெற கவுதமனுக்கு கல்வித்தகுதி இல்லை என்று கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால், கவுதமனுக்கு தொழில்நுட்ப அதிகாரி என்ற பதவி உயர்வை பல்கலைக்கழகம் நிர்வாகம் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந் தேதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாரதியார் பல்கலைக்கழக நூலக பிரிவில் பணியாற்றும் ரமேஷ், ராம்குமார், கனகராஜ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். கடும் கண்டனம்
இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டு உள்ளது. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழகமும், கவுதமனும் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
உரிய கல்வித்தகுதி இல்லாத கவுதமனை, நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்துள்ள பல்கலைக்கழகத்தின் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. இதன் மூலம், இப்பதவியை பெற முழு தகுதியுடைய ஒருவரது உரிமையை பல்கலைக்கழகம் பறித்துள்ளது. சட்டவிரோத நியமனங்கள்
புகார் குறித்து விசாரணை நடத்திய விசாரணை குழு, கவுதமனுக்கு கல்வித்தகுதி இல்லை என்று அறிக்கை அளித்த பின்னரும், அவருக்கு பல்கலைக்கழகம் பதவி உயர்வு வழங்கி உள்ளது. அது மட்டுமின்றி அவரை பணியில் இருந்து ஓய்வுபெறவும் அனுமதித்துள்ளது.
இதுபோன்ற வழக்குகள் ஐகோர்ட்டுக்கு புதிது அல்ல. தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், இதுபோலத்தான் சட்டவிரோதமாக நியமனங்களை மேற்கொள்கின்றன.
பல்கலைக்கழகங்களின் இதுபோன்ற செயல்களினால், அனைத்து தகுதிகளும் உள்ள நபர்கள் பதவியை பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். காது கேட்கவில்லை
இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகம் காது கேளாதது போல் செயல்பட்டுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற சட்டவிரோத நியமனங்கள் நடைபெறக்கூடாது என்பதால் கீழ்க்கண்ட விதிமுறைகளை பிறப்பிக்கிறேன்.
பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்கள் வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையாகவும், சமவாய்ப்பு அளித்தும் நடைபெற வேண்டும். பதவிக்கான கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் மட்டுமல்லாமல், இணையதளத்திலும் வெளியிட வேண்டும். ஊதியம் வசூலிப்பு
ஒருவரது நியமனத்தின் தகுதி குறித்து புகார் வந்தால், அது குறித்து 3 மாதத்துக்குள் விசாரித்து முடிவுகளை அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்க வேண்டும். நேர்முகத்தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தகுதி இல்லாதவர்கள் பணி நியமனம் பெற்றால், அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை, அவரை அப்பதவிக்கு தேர்வு செய்த தேர்வுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பல்கலைக்கழகம் வசூலிக்க வேண்டும்.
போலி ஆவணங்கள், தவறான தகவல் கொடுத்து ஒருவர் பணி பெற்றிருந்தால், அவரை பணிநீக்கம் செய்த பின்னர், அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க வேண்டும். மதம் மாற்றம்
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பை பெறுவதற்காக ஒருவர் மதம் மாறி இருப்பது பின்னர் தெரியவந்தால் அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் எதிர்மனுதாரர் கவுதமன், நூலக தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு அடைந்த பின்னர் பெற்ற கூடுதல் ஊதியத்தொகையை, அவரிடம் இருந்து பல்கலைக்கழகம் வசூலிக்கவேண்டும். இவரை இப்பதவிக்கு நியமித்த தேர்வுக்குழு உறுப்பினர்கள் மீது பாரதியார் பல்கலைக்கழகம் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.