தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ கொரோனா மருந்தை எங்கு வாங்கலாம்..? யார் பயன்படுத்தலாம்...? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 02, 2021

Comments:0

தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ கொரோனா மருந்தை எங்கு வாங்கலாம்..? யார் பயன்படுத்தலாம்...?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் வகையில் '2-டிஜி' (டி டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 17-ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்தது.
மத்திய பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் இம்மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
2-டிஜி மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஆகியோர் கடந்த மே 17ல் வெளியிட்டனர். முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் இம்மருந்தை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள 2டிஜி கரோனா மருந்தைத் தண்ணீரில் கலந்து குடிக்கும் லேசான அறிகுறி கொண்ட நோயாளிகள் 2 முதல் 2.5 நாட்களில் குணமடையலாம். இதன் மூலம் ஆக்சிஜன் தேவையை 40 சதவீதம் வரை குறைக்கலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. டிஆர்டிஒ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2 டிஜி மருந்தின் விலை ரூ.990 க்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், மத்திய மாநில அரசுகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது. இந்நிலையில் இந்த மருந்து பயன்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-
* டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) மருந்தை மருத்துவர்கள் மிதமான அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரை பரிந்துரைக்கலாம். * கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், தீவிர இருதய நோய்கள், ஹெபாடிடிஸ் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய் கொண்டவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்து சோதிக்கப்படாததால், அவர்களுக்கு இம்மருந்தை பரிந்துரைப்பதில் மருத்துவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது.
* இந்த மருந்தை எடுத்துக்கொள்ள விரும்பும் நோயாளிகள் தங்களின் உதவியாளர்கள் வாயிலாக மருத்துவமனையை டாக்டர் ரெட்டிஸ் லேபை அணுக வலியுறுத்த வேண்டும். 2DG@drreddys.com இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews