ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம் – எளிய வழிமுறைகள் இதோ!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 12, 2021

Comments:0

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம் – எளிய வழிமுறைகள் இதோ!!

நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டை இணைப்பை கட்டாயமாகியுள்ள நிலையில், அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம். இதனால் என்ன சிக்கல்கள் உள்ளது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவு:
போலியாக ஓட்டுநர் உரிமம் புழக்கத்தில் உள்ளதால் அவற்றை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பதை கட்டாயமாகியுள்ளது. இவற்றை செய்யாதவர்கள் எதிர்காலத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெற முடியாது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு துறைகளும் இணைய வழி சேவைகளை வழங்குவது போல், ஆர்.டி.ஓ அலுவலகங்களும் ஆன்லைன் சேவைகளை மேற்கொள்ளவே வலியுறுத்துகின்றது. நமது வீட்டில் உள்ள இணைய வசதியின் மூலம் வீட்டில் இருந்தபடியே நமது ஓட்டுநர் உரிமத்துடன், ஆதார் அட்டையை இணைக்கும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார்-ஓட்டுநர் உரிமத்தை இணைக்கும் வழிமுறைகள்:
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைக்க முதலில் மாநில போக்குவரத்துத் துறையின் அதிகாரபூர்வ தளமான (https://parivahan.gov.in) க்கு செல்ல வேண்டும். ‘ஆதார் இணைப்பு’ என்ற விருப்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் ட்ரைவிங் லைசென்ஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை உள்ளிட்ட வேண்டும்.
பின்னர் விவரங்களை பெறு என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இப்பொழுது ஆதார் எண் மற்றும் கைபேசி எண் இரண்டையும் உள்ளிட்ட வேண்டும்.
பின்னர் சமர்ப்பி என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
உங்களது கைபேசி எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்ட வேண்டும்.
OTP எண்ணை உள்ளிட்ட பிறகு ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் இரண்டும் இணைக்கப்பட்டு விடும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews