தாணே மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,200 ஊக்கத்தொகை வழங்க முடிவு
தாணே: இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. அதேநேரத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வமாக மாணவர்கள் பங்கேற்பதில்லை என பரலவாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள தாணே மாநகராட்சி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதாவது, மாதத்துக்கு குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு ஊக்கத்தொகையாக ரூ.1,200 வழங்கப்படும் என தாணே மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த ஊக்கத்தொகையானது மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விபின் சர்மா தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.