தமிழகத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு இல்லாமல் ரூ.31,000/- ஊதியத்தில் பணி - CSIR CECRI Recruitment Notification PDF 2021  - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 12, 2021

Comments:0

தமிழகத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு இல்லாமல் ரூ.31,000/- ஊதியத்தில் பணி - CSIR CECRI Recruitment Notification PDF 2021 

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Associate & Project Assistant ஆகிய பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எனவே கீழுள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR CECRI
பணியின் பெயர் Project Associate & Project Assistant
பணியிடங்கள் 15
கடைசி தேதி 21.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Project Associate & Project Assistant பணிகளுக்கு என மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Project Associate – 35 வயது
Project Assistant – 50 வயது CSIR CECRI கல்வித்தகுதி :
Project Associate-I – M.Sc (Chemistry)/ BE/ B.Tech (Textile Chemistry) தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Project Assistant (Mech) – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma (Mech/ EEE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CECRI ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது Online முறையின் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் நிர்வாக அதிகாரி, சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி -630003 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

CSIR CECRI Recruitment Notification PDF 2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews