மூடப்பட்ட தனியார் பள்ளி - மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசே நடத்தும் என அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!
மூடப்பட்ட பள்ளி - மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு:
சென்னை கீழ்பாக்கத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கிவந்த சீதா கிங்ஸ்டன் பள்ளியை இந்து சமய அறநிலையத் துறையே நடத்தும் என அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு.
குத்தகை காலம் முடிந்து வாடகை செலுத்த முடியாததால் பள்ளி மூடப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து அமைச்சர் அறிவிப்பு. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்ட சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் அறிவிப்பு
காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. இவற்றில் கதவு எண்.7658-ல் 44.5 கிரவுண்ட் பரப்பில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது இவற்றில் 2010-ம் ஆண்டு 12.5 கிரவுண்ட் இடம் திருக்கோயில் வசம் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டது. 99 ஆண்டு குத்தகை காலம் முடிவுற்ற பின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78-ன் கீழ் சுவாதீன உத்தரவு பெறப்பட்டு பின்னர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் மூலம் வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கில் திருக்கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. அதன் அடிப்படையில் இப்பள்ளிக்கூடத்தை தங்களால் தொடர்ந்து நடத்த இயலாது என கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிறுவனத்தினர் தெரிவித்து 13.06.2021 அன்று காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் செயல் அலுவலரிடம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலரால் 32 கிரவுண்ட் இடம் மற்றும் பள்ளி கட்டடங்களுடன் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டு திருக்கோயில் வசம் முழுமையாக சுவாதீனம் பெறப்பட்டது. இந்த நிலத்தில் இதுவரை நடத்தப்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்த விவரம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது கவனத்திற்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் எடுத்துச் செல்லப்பட்டது. அதனை கேள்வியுற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுவரை பயின்று வந்த மாணவச் செல்வங்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இப்பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்திட உத்தாவிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று (15.06.2021) ஆணையர் அலுவலகத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பள்ளிக் கல்வி துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.