கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை, போனில் தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளுக்கு ஏற்பாடு செய்து தரும் வகையில், தன்னார்வலராக பணிபுரிய தயாராக உள்ள ஆசிரியர்கள் குறித்த, பட்டியல் திரட்டும் பணி நடக்கிறது.கொரோனா லேசான அறிகுறி இருப்பவர்களை, வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்கு வசதி இல்லாதவர்களுக்கு, பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தேவைகளை கேட்டறிந்து, உரிய கால அவகாசத்திற்குள், அதை பூர்த்தி செய்து தர, சில ஆசிரியர்கள் ஏற்கனவே தன்னார்வலர்களாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது இப்பணியில் ஈடுபட, ஆட்கள் அதிகம் தேவைப்படுவதால், ஆசிரியர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தயாராக உள்ளவர்களின் விருப்பம் கேட்டறியும் பணி நடக்கிறது.இவர்கள் வட்டார வாரியாக, வீட்டிலிருந்தபடியே, போன் மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டோரை தொடர்பு கொள்ள வேண்டும்.இப்பட்டியலை தொகுத்து, கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.