பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, தலைமை ஆசிரியர்கள், உயர்கல்வி துறை பேராசிரியர்களின் பரிந்துரைகளை பெற மதிப்பெண் கமிட்டி முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவல் பிரச்னையால், மாணவர்களின் உடல் நலன் கருதி, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வை, மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, தமிழக அரசும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. இந்நிலையில், தமிழக பாடதிட்ட மாணவர்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கிட, பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில், சென்னை பல்கலை துணைவேந்தர் கவுரி, உயர் கல்வி துறை செயலர் கார்த்திகேயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் நேற்று முதல் பணிகளை துவக்கி உள்ளனர். முதல் கட்டமாக, பள்ளி கல்வித் துறை தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி துறை பேராசிரியர்கள், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள், அண்ணா பல்கலை பேராசிரியர்கள், சட்ட பல்கலை மற்றும் மருத்துவ பல்கலை பேராசிரியர்களும் கமிட்டியில் இடம் பெறும் வகையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கமிட்டியில் இடம் பெற்றவர்களிடம் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறையை முடிவு செய்ய, தனித்தனியாக பரிந்துரைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றையும், சி.பி.எஸ்.இ., மற்றும் பிற மாநில மதிப்பெண் வழங்கும் முறைகளையும் ஆய்வு செய்து, மதிப்பெண் நிர்ணயிக்கும் முறைகள் இறுதி செய்யப்பட உள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.