தமிழகத்தில் புதிய தளர்வுகளில் இரண்டாம் வகையில் உள்ள 23 மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை குறித்து அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய தளர்வுகள் : தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பேருந்து சேவை முழுவதாகும் தடை செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது. தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்ததால் ஊரடங்கு கடும் கட்டுபாடுகளுடன் நீட்டிக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் ஊரடங்கு மற்றும் தடுப்பூசியின் விளைவாக தற்போது தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் ஜூன் 14 முதல் தமிழகத்தில் மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்து தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் வகையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. இரண்டாம் வகையில் 23 மாவட்டங்கள் உள்ளன, இந்த மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களும் பேருந்து சேவையை எதிர்பார்த்தது ஆனால் அரசு தொற்று பரவல் குறைந்துள்ள மூன்றாம் வகையில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே பேருந்து சேவைக்கு அனுமதியளித்தது. தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 28 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் நாளை முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் மருத்துவ குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறயுள்ளது. இந்த கூட்டத்தில் கூடுதல் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் 2 ம் வகை பிரிவில் உள்ள 23 மாவட்டங்களிலும் பேருந்து சேவை குறித்து அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.