பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் திருத்தம் – முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 24, 2021

Comments:0

பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் திருத்தம் – முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்!

பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் திருத்தம் – முதல்வர் ட்வீட்!
கேரள மாநிலத்தில் அடுத்தடுத்து நடைபெறும் பெண்களுக்கான குற்றங்கள் காரணமாக இனி பள்ளி பாடப் புத்தகங்களில் பெண்களுக்கு எதிரான வார்த்தைகள் இடம்பெறாமல் திருத்தம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார்.

பாலின சமத்துவம்:
கேரள மாநிலத்தில் சில மாதங்களாக பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு சிறு வயதில் இருந்தே பெண்கள் மீது மதிப்பு ஏற்படும் வகையில் முக்கிய முடிவை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைகளை மேம்படுத்துவதற்காக பெண்களுக்கு எதிரான எந்தவொரு கேவலமான சொற்களும் இடம்பெறாத வகையில், கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு தணிக்கை செய்யப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “பாலின சமத்துவத்தின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு, கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு தணிக்கை செய்யப்படும், இது பெண்களை இழிவுபடுத்தும் சொற்களையும், சொற்றொடர்களையும் சல்லடை செய்யும். எங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளை பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைகள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் இடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews