Breaking

Thursday, June 17, 2021

ஜூலை 1ல் ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., வகுப்பு

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., வகுப்பு ஜூலை 1ம் தேதி துவங்குகிறது.ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு மாணவர்கள், பி.எஸ்சி., நர்சிங் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், பி.எஸ்சி., துணை மருத்துவ மாணவர்களுக்கு, வரும் ஜூலை, 1ம் தேதி முதல் வகுப்புகள் துவங்க உள்ளன.

எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். ஜிப்மர் வளாகத்தில், மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம்.கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், கொரோனா பரிசோதனைக்கு பிறகே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள், நேரடியாக அவரவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog