திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 15.06.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 15, 2021

Comments:0

திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 15.06.2021

திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
முன்னிலை: முனைவர். எஸ்.செந்திவேல்முருகன்
ந.க.எண். 802/EMIS/ஒபக/2021
நாள். 15.06.2021
திண்டுக்கல் மாவட்டம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை - 2020-2021 ஆம் சுல்வி ஆண்டில் பயின் மாணாக்கர்களுக்கு EMIS Portalல் தேர்ச்சி விபரங்களை உள்ளீடு செய்தல் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு அனைத்து தொடக்க நடுநிலை-உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை பணிகள் தொடங்குதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

1) சென்னை, தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையிரின் செயல்முறைகள் ந.க.எண்.34462/பிடி1/இ1/2020 நாள்.11.06.2021.

2) அரசாணை (நிலை) எண்.48 பள்ளிக் கல்வித் (அ.தே) துறை நாள், 25.02.2021. சென்னை 6, தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைககள் ந.க.எண்.004010/ஜெ1/2020 நாள்.31.05.2021.

3) பார்வையில் 2ல் காணும் அரசாணையில் 2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர் அனைவரும் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பார்வை 3ல் காணும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வாயிலாக அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணாக்கர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவுக்கவும், மேற்படி பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வனர பயின்ற மாணாக்கர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளிகளில் தலையாசிரியர்கள் தங்கள் பள்ளி! தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இச்செயல்முறை ஆணைகளை அரசு உயர்நிலை, மேல்நியை பள்ளிகளில் செயல்படும் 6 முதல் 8 வகுப்புகளுக்கும் பின்பற்றி நடைமுறைப்படுத்து கேட்டுக்கொள்ளப்படுகிறது. 2020-2021 ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயின்ற மாணாக்கர்களின் தேர்ச்சி விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாணாக்கர்களின் தேர்ச்சி விவரங்களை (EMIS) இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கு தேவையான அறிவுறைகள் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் வழங்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews