12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்தி, அதனால் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாணவர் உயிரிழந்தாலும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆந்திர மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12ம் வகுப்பு தேர்வுகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் நடத்த பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டது. அதற்காக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது. தேர்வு நெருங்கும் நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. அதனால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்த காரணத்தால் முதலில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆந்திரா உட்பட 4 மாநிலங்கள் பொதுத்தேர்வை ரத்து செய்யாமல் உள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தேர்வுகளை நடத்தி ஒரு மாணவர் உயிரிழந்தாலும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 31 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதால் மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக அனைத்து மாநிலங்களும் அதே தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.