தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வந்த போதிலும், 3ம் அலையின் அச்சத்தின் காரணமாக இந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக கேள்விக்குறி எழுந்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் அந்த கல்வியாண்டுக்கான இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் ஜூலை மாதம் முதல் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வமின்றி இருந்தனர்.
தொடர் விடுமுறையின் காரணமாக வெறுப்படைந்த மாணவர்கள் வேறு வழியின்றி ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். சிறு குழந்தைகளுக்கும் கூட ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதனால் பெற்றோர்களும் ஆன்லைன் வகுப்பின் போது உடனிருக்கும் சூழல் உருவானது. நாட்கள் செல்ல செல்ல, ஆன்லைன் வகுப்புகளினால் மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் கூட சலிப்பு மற்றும் மனஅழுத்தம் வரத்தொடங்கியது. இருப்பினும் மாணவர்களின் ஒரு வருட கல்வி முழுவதும் ஆன்லைன் முறையிலேயே கற்பிக்கப்பட்டுள்ளது. 2020-2021ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் தேர்வில்லாமல் தேர்ச்சி பெறுவதாகவும் அரசு அறிவித்தது. தொடர்ந்து 2021-2022 க்கான புதிய கல்வி ஆண்டு ஆரம்பமாகியுள்ளது. தற்போது கொரோனா 2ம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் இந்த வருடமாவது மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு செல்வார்கள் என்று பல தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், இந்தியாவில் ஆறில் இருந்து எட்டு வாரங்களுக்குள் கொரோனா தொற்றின் 3ம் அலை பரவ வாய்ப்பிருப்பதாகவும், இதனால் குழந்தைகளே அதிகம் பாதிக்க வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இப்படியான சூழலில் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குவர். இதனால் இந்த கல்வி ஆண்டும் ஆன்லைனிலேயே தொடங்கி ஆன்லைனிலேயே முடியும் சூழல் உள்ளது. மாணவர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் மிகுந்த ஏக்கத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.