நுழைவு தேர்வுகளுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்தி, மாணவர்களை சேர்க்கும்படி, பள்ளி கல்வி இயக்குனரகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' செய்யப்பட்ட மாணவர்களுக்கு, மதிப்பெண் நிர்ணய முறையை வெளியிடவும், பிளஸ் 1 சேர்க்கைக்கான வழிகாட்டலை வழங்கவும், பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து பிளஸ் 1சேர்க்கை குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தனியார் சுயநிதி பள்ளிகளில், பிளஸ் 1மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மேல்நிலை பிரிவுகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு, மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, பாட பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேலாக, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வந்தால், ஒவ்வொரு பிரிவிலும், 15 சதவீதம் வரை கூடுதல் மாணவர்களை சேர்க்கலாம். அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால், மாணவர்களுக்கு அப்பிரிவுடன் தொடர்புடைய, கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து, 50 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்த வேண்டும். அதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவு களை ஒதுக்கலாம்.பிளஸ் 1 சேர்க்கை முடித்த மாணவர்களுக்கு, இந்த மாதம் மூன்றாவது வாரம் முதல், அரசின் வழிகாட்டுதல்படி வகுப்புகளை துவக்கலாம்.
பிளஸ் 2மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைதொடர்பு முறைகளில் பாடங்களை துவக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.