பள்ளி செயல்பாடுகள் தொடங்குதல் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 09, 2021

Comments:0

பள்ளி செயல்பாடுகள் தொடங்குதல் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

திருப்பூர் மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் / 4/2021 நாள்.09.06.2021
ந-க.எண்.
பொருள்:
பள்ளிக்கல்வி-அரசு/அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியளார்கள் "அரசின் நிலையான நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிக்கு வருகை புரிதல் - சார்ந்து வழிகாட்டு 14.06.2021 முதல்

பார்வை:
1. அரசாணை நிலை எண் 613, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் : 08.06.2021

2. சென்னை தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 344622/பிடி 1/இ 1/2021 நாள் : 08.06.2021

பார்வையில் கண்ட அரசனின் படி, நாடு முழுவதும் கொரனோ பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்க்கான சான்றிதழகள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெறவுள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும்,பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டும் . இதன் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றிடுமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்வட்டராக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்விஅலுவலர் திருப்பூர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews