கொரோனா பரவல் அதிகரிப்பதால் முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஊரடங்கை அமல்படுத்தி மக்களுக்கு நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஹரிகரன் கூறியுள்ளார்.
நிவாரண நிதி :
கொரோனா பரவல் தமிழகத்தில் உச்சம் தொட்டு வருகிறது. நோய் பரவல் அதிகரிப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து தொற்று பாதித்தவர்கள் உயிரிழப்பதும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் நோய்த்தொற்றால் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 23,000ஐ கடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் மே 2 தேதி வெளி வந்தது. கடந்த 10 வருடங்களுக்கு பிறகு திமுக அமோக வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சராக வருகின்ற மே 7ம் தேதி பதவியேற்க உள்ளார். அவர் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தார். அதில் எதை முதலில் அமல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த கொரோனா பரவல் சூழ்நிலையில் பதவியேற்க உள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கோவையை சேர்ந்த மருத்துவர் ஹரிஹரன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் உடனடியாக தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கும் வரை நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.