ரேஷன் அட்டைகளில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 11, 2021

Comments:0

ரேஷன் அட்டைகளில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம் எவ்வாறு செய்வது என்பது குறித்து எளிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம். ரேஷன் அட்டை:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை பெற மிகவும் தேவையான ஒன்றான ரேஷன் அட்டை மூலமாக பல ஏழை, எளிய குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். மேலும் புதிதாக சமையல் எரிவாய்வு சிலிண்டர் பதிவு செய்வதிலும் இந்த ஆவணம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசு அறிவிக்கும் சில திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு சென்றடைகின்றன.
அத்தகைய முக்கியமான ரேஷன் அட்டைகளில் குடும்பத்தில் புதிதாக திருமணம் முடிந்து சென்றவர்கள், அல்லது இறந்தவர்கள் பெயர்களை நீக்கம் செய்ய முன்னதாக தாலுகா அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது அனைத்தும் இணைய வழியாக மாறிவிட்டது. அதன்படி எவ்வாறு ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். ரேஷன் அட்டை பெயர் நீக்கம்:

முதலில் அரசின் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் மின்னணு அட்டை சேவை என்பதில் குடும்ப உறுப்பினர் நீக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் ரேஷன் அட்டையில் கொடுத்துள்ள மொபைல் நம்பரை கேட்கும்.
உங்களது மொபைல் எண்ணை கொடுத்த பின்னர் கீழுள்ள கேப்ட்சா என்ற எழுத்துகளை பதிவிட்டு கிளிக் செய்யவும்.
அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த எண்ணிற்கு ஓடிபி (OTP) வரும்.
ஓடிபி கொடுத்த பின்னர் வேறு ஒரு பக்கத்திற்கு செல்லும் அதில் ஏற்கனவே உள்ள குடும்ப உறுப்பினர்கள் பெயர் இருக்கும். அதில் அவர்களில் வயது போன்ற விவரங்கள் இருக்கும்.
அதில் கீழே குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம் என்ற ஆப்சன் இருக்கும். நீங்கள் பெயரை நீக்க வேண்டும் எனில், அதனை கிளிக் செய்யவும். பிறகு மற்ற ஆவணங்கள் என்ற பாக்ஸ் இருக்கும். அதில் இறப்பு சான்று, திருமண சான்றிதழ், தத்தெடுப்பு சான்றிதழ், இதர சான்றிதழ்கள் என இருக்கும். ஆக அவற்றில் எது உங்களுக்கு பொருத்தமானதோ, அதனை கிளிக் செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் மேற்கூறிய ஆவணங்களுடன் கீழ்கண்ட ஏதேனும் ஒரு ஆவணத்தினை கொடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளவும். இது 1 எம்பி அளவு இருக்க வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை
சிலிண்டர் ரசீது
கேஸ் புத்தகம்
மின்சார கட்டண ரசீது
பான் கார்டு
வீட்டு பத்திரம்
வாடகை ஒப்பந்த பத்திரம்
வருமான சான்று அதன் பின்னர் நீங்கள் கொடுத்துள்ள விவரங்கள் அனைத்தும் சரியா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும். அது சரியாக இருக்கும் பட்சத்தில் கோரிக்கை வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது என வரும். அதோடு உங்களுக்கான குறிப்பு எண்ணும் வரும். அதனை பிடிஎஃப் ஆக அல்லது ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
உங்களது கோரிக்கை என்ன நிலையில் உள்ளது என இந்த நம்பரை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். கோரிக்கை நிலையை தெரிந்து கொள்ள மேலே தெரிவித்துள்ள ஹோம் பக்கத்திற்கு சென்று அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்பதை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews