உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கரோனா பரிசோதனை செய்யும் முறை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 30, 2021

Comments:0

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கரோனா பரிசோதனை செய்யும் முறை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கரோனா வைரஸ் பாதித்துள்ளதா என அறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கண்டறியும் முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் மிக எளிமையானதும், புதுமையானது மான கரோனா பரிசோதனை முறையை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தை (நீரி) சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.
தற்போது நாட்டில் கரோனா வைரஸ் பாதித்துள்ளதா என அறிய ஆர்டி-பிசிஆர் முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இதில் முடிவுகள் தெரிய ஒரு நாளாகிறது. இந்நிலையில்தான் மிக விரைவில் முடிவுகளை அறியும் முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நாக்பூரைச் சேர்ந்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை எளிதாகவும், விரைவாகவும், சவுகரியமாகவும், சிக்கனமாகவும் உள்ளது.
இதில் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும்.
கரோனா சோதனைக்கு வருபவர், தனது வாயில் உப்புநீரை எடுத்துக் கொண்டு அதை கொப்பளித்து சோதனை குழாயில் சேகரித்துக் கொடுக்க வேண்டும். பின்னர் இந்த நீரை ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து முடிவுகளை 3 மணி நேரத்தில் பெறலாம். உள்கட்டமைப்பு தேவைகள் ஒரு தடையாக இருக்கும் கிராமப்புற மற்றும் பழங்குடியின பகுதிகளுக்கு இந்த புதுமையான சோதனை தொழில்நுட்பம் பயனளிக்கும். இந்த தொழில்நுட்பத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) ஒப்புதல் கிடைத்துள்ளது.
ஆர்டி-பிசிஆர் முறையில் சளி மாதிரி சேகரிப்பு முறைக்கு நேரம் தேவை. மேலும் சேகரிப்பு மையத்துக்கு மாதிரியைக் கொண்டு செல்வதிலும் சிறிது நேரம் இழக்கப்படுகிறது. அதே நேரத்தில் உப்புநீர் கொப்பளிப்பு முறை, ஆர்டி-பிசிஆர் முறை உடனடியாகவும், வசதியான முறையாகவும் அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
இந்த புதுமையான தொழில்நுட்பத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட பலர் பாராட்டுதெரிவித்துள்ளனர். - பிடிஐ

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews