புதிதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, மகேஷ் பொய்யாமொழி தலைமையில், அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்தும், பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண்கள் எப்படி கணக்கிடுவது என்பது குறித்தும், ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வகுப்புகளை போல அல்லாமல், உயர்கல்விக்கான படிப்புகள் தேர்வு செய்ய வேண்டியிருப்பதால், பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.குறிப்பாக, இதில் பெறும் கட்-ஆப் மதிப்பெண்கள் கொண்டு தான், இன்ஜி., மற்றும் 'புரோபஷனல்' படிப்புகளை, மாணவர்களால் தேர்வு செய்ய முடியும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வியாளரும், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாநில ஆலோசகருமான பாலகிருஷ்ணன் கூறியதாவது:
ஜூலை மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தலாம். அதற்குள் தொற்று வீரியம் குறைந்துவிடும். தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசும் மாற்று ஏற்பாடு செய்ய அவகாசம் கிடைக்கும். ஆன்லைன், ஆப்லைன் என இருவழிகளில் தேர்வு நடத்த, பரிந்துரைப்பது சரியான தீர்வாக அமையாது.
ஆன்லைன் மூலம், தேர்வு நடத்துவதாக இருந்தால், &'டிஸ்கிரிப்டிவ் டைப்&' எனும், நீண்ட பதில்கள் எழுத வேண்டிய கேள்விகளுக்கு விடையளித்து, அதை சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
அந்தந்த பள்ளிகளை தேர்வு மையமாக அறிவித்து, உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்தாலே போதும். இத்தேர்வில் பங்கேற்க முடியாதோருக்கு, உடனடி பொதுத்தேர்வும் உடனே நடத்தி, பிறகு ரிசல்ட் வெளியிட்டால், உயர்கல்வியில் சேர சிக்கல் ஏற்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.
Search This Blog
Monday, May 10, 2021
Comments:0
அந்தந்த பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு - கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.