தமிழகத்தில் புதிதாக, நாளை அமைய உள்ள அரசில், முக்கிய பொறுப்புகளை வகிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் இடையே கடும் போட்டி ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 06, 2021

Comments:0

தமிழகத்தில் புதிதாக, நாளை அமைய உள்ள அரசில், முக்கிய பொறுப்புகளை வகிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் இடையே கடும் போட்டி !

தமிழகத்தில் புதிதாக, நாளை அமைய உள்ள அரசில், முக்கிய பொறுப்புகளை வகிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்ததும், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர்.கடும் போட்டிபள்ளிக் கல்வி துறையில், செயலர் முதல் இயக்குநர், இணை இயக்குநர் வரையில், பல்வேறு பொறுப்புகளில், தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொறுப்புகளில் அமர, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.பள்ளி கல்வி இயக்குநரகம், தொடக்க கல்வி துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மெட்ரிக் இயக்குநரகம், பாடநுால் கழகம், ஆசிரியர் தேர்வு வாரியம் என, அனைத்து துறைகளிலும், மாற்றம் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியின் போது, அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவு பட்டியலில் இருந்தவர்களும், மீண்டும் முக்கிய பொறுப்புகளில் அமர வாய்ப்புள்ளது.அரசுக்கு பிரச்னை இன்றி, நிர்வாக பணிகளை கவனிக்க வேண்டும் என்பதால், அவர்களை பயன்படுத்தி கொள்ள, தி.மு.க., தரப்பு முயற்சிக்கும் என, கூறப்படுகிறது. முன்னுரிமை அதேபோல், அ.தி.மு.க., அரசால் ஓரங்கட்டப்பட்ட அதிகாரிகளுக்கு, முன்னுரிமை கிடைக்கலாம். பள்ளி கல்வி செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரன் பதவி வகித்தபோது, அவரால் சில அதிகாரிகள் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.ஆனால், உதயசந்திரன் வேறு துறைக்கு மாற்றப்பட்டதும், அவரது நம்பிக்கைக்குரியவர்களும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டு, ஓரங்கட்டப்பட்டனர். அவர்கள், தி.மு.க., ஆட்சியில் முக்கிய இடங்களை பிடிக்கலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆனாலும், அதிகாரிகள் பலர் தங்களுக்கு வேண்டிய, தி.மு.க., - மா.செ.,க்களிடம் நெருக்கத்தை காட்டி, முக்கிய இடங்களுக்கு துண்டு போடுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews