பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் WhatsApp மூலம் அலகு தேர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 23, 2021

Comments:0

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் WhatsApp மூலம் அலகு தேர்வு!

திருப்பூரில் பிளஸ் 2 மாணவர்களுக்கான அலகுத்தேர்வு, 'வாட்ஸ்அப்' மூலம். நாளை துவங்குகிறது.கொரோனா இரண்டாவது அலை, வேகமாக பரவி வரும் அதேசமயம், பிளஸ் 2 பொதுத்தேர்வை திட்ட மிட்டபடி நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. தற்போது மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே அலகுத்தேர்வுகள் நடத்த அரசு தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய வழிகாட்டு நெறிமுறைகள்:ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளடங்கிய 'வாட்ஸ்அப் குழு' உருவாக்க வேண்டும். மாணவர், மாணவியருக்கென தனி குழுக்கள் அவசியம். மே 24ம் தேதி (நாளை) அலகுத்தேர்வுகள் துவங்குகிறது. முதல் பாதியில் இருந்து, 50 மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமையும்.தேர்வு நாளன்று குழுவில் வினாத்தாள்களை அனுப்ப, மாணவர்கள் விடையை தனித்தாளில் எழுதி பெற்றோர் கையொப்பம் பெற வேண்டும்.விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் கட்டாயம் இடம்பெற வேண்டும். எழுதப்பட்ட விடைத்தாள்களை, 'Adobe scan app' மூலம் புகைப்படம் எடுத்து, 'Pdf' கோப்பாக பாட ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.ஆசிரியர்கள் விடைத்தாள்களை 'வாட்ஸ்அப்' மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்ணை வழங்க வேண்டும். 'வாட்ஸ்அப்' குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக்கூடாது.மாணவர்கள் தேர்வுகளை நோட்டிலோ மற்றும் தாளிலோ எழுதி பத்திரமாக பாதுகாத்து அறிவிக்கும் நாளில் ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.பள்ளி தலைமை ஆசிரியர், இதை உறுதிப்படுத்த வேண்டும். ஏற்கனவே, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மார்ச் 16 - 18 தேதிகளிலும், மார்ச் 26 - ஏப்., 1வரையிலும் இரு கட்டங்களாக திருப்பூர் கல்வி மாவட்ட அளவில் தேர்வுகள், வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் மூலம், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் குறைந்த மதிப்பெண் பெற்ற மற்றும் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பாட ஆசிரியர்கள் மூலம் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியில், எந்த தேர்வு?
அலகுத்தேர்வு தினமும், காலை, 11:45 - 12:45 மணி வரையும், மாலை, 3:00 - 4:30 வரையும் நடக்கிறது. 24ம் தேதி காலை - கணிதம், தாவரவியல், பொருளாதாரம், மாலை - ஆங்கிலம்; 25ம் தேதி காலை - இயற்பியல், வர்த்தகம்; மாலை - கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், கணினி தொழில்நுட்பம், அரசியல் அறிவியல், புள்ளியியல்; 26ம் தேதி காலை - உயிரியல், விலங்கியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், வரலாறு, ஆடை தொழில்நுட்பம்; மாலை - தமிழ்; 27ம் தேதி - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுகள் நடக்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews