மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி - செ.கு. எண்: 003 நாள்: 19.05.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 19, 2021

Comments:0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி - செ.கு. எண்: 003 நாள்: 19.05.2021

செ.கு. எண்: 003 நாள்: 19.05.2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான திரு. ஏ.ரமேஷ் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையுற்றேன்.
பல முக்கியப் போராட்டங்களைச் சிரத்தையுடன் முன்னெடுத்தவர் என்பதுடன், ஆசிரியர் அரசு ஊழியர்கள் பல்வேறு பயன்களைப் பெறவும் காரணமாக இருந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் மீதும், என்மீதும் மாறாப் பற்று கொண்டவர். ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்துக்காக மட்டுமின்றி, இயற்கைப் பேரிடர்கள் சூழும் நேரங்களில், மக்களுக்குக் களத்தில் இறங்கிப் பல்வேறு உதவிகளைப் புரியக் கூடிய தொண்டுள்ளம் படைத்தவர். அவரது மறைவு, ஆசிரியர் சமூகத்திற்கும், கல்வித்துறைக்கும் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பாகும். திரு. ஏ.ரமேஷ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews