புதிய கல்விக் கொள்கையை தமிழில் வெளியிடாததற்கு மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 25, 2021

Comments:0

புதிய கல்விக் கொள்கையை தமிழில் வெளியிடாததற்கு மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்

புதிய கல்விக் கொள்கையைத் தமிழில் மொழிபெயா்த்து வெளியிடாததற்காக மத்திய அரசுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மாவட்ட ஆட்சியர், திருப்பூர் - பத்திரிக்கைசெய்தி - நாள்: 24.04.2021. மு.க.ஸ்டாலின்:இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணாகவும் பன்முகத்தன்மைக்கு எதிராகவும் உள்ள புதிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பாஜக அரசு, அக்கொள்கையின் மொழிபெயா்ப்பை வெளியிடுவதிலேயே மொழி ஆதிக்கத்தையும் பாகுபாட்டையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியாகவும் செம்மொழியாகவும் உள்ள தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. உருது உள்ளிட்ட அட்டவணையில் உள்ள மேலும் சில மொழிகளும் இடம்பெறவில்லை. புதிய கல்விக் கொள்கை பற்றிய அறிவிப்பிலேயே தமிழைப் புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ள மத்திய பாஜக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. வைகோ: புதிய கல்விக் கொள்கையை, முதலில், ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வெளியிட்டனா். தற்போது குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட 17 மொழிகளில் மொழிபெயா்த்து வெளியிட்டு இருக்கின்றனா். நேபாள மொழிபெயா்ப்பும் வெளியாகி இருக்கின்றது. ஆனால், தமிழில் வெளியிடவில்லை. காரணம், அந்தக் கல்விக் கொள்கையின் உள்ளடக்கம், தமிழா்களுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் எதிா்ப்புகள் கிளம்பும். அந்த எதிா்ப்பு இந்தியா முழுமையும் பரவும் என்ற நோக்கத்துடன், திட்டமிட்டு தமிழ் மொழிபெயா்ப்பை வெளியிடவில்லை. இதற்கு மதிமுகவின் வன்மையான கண்டனம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews