தள்ளுபடியாகும் தபால் ஓட்டு எது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 29, 2021

Comments:0

தள்ளுபடியாகும் தபால் ஓட்டு எது?

தள்ளுபடி செய்யவேண்டிய தபால் ஓட்டுகள் குறித்து தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.தபால் ஓட்டு பதிவில், செல்லாத ஓட்டு கண்டறிய, தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 28.04.2021 - PDF
தபால் ஓட்டு உறைக்குள், உறுதிமொழி படிவம் இல்லை என்றாலோ, படிவத்தில் வாக்காளர் மற்றும் சான்றொப்பம் செய்த அதிகாரியின் கையெழுத்து இல்லை என்றாலோ, அது செல்லாத ஓட்டாக கருதப்படும்.உறுதிமொழி படிவத்தில் உள்ள வாக்காளர் வரிசை எண்ணும், ஓட்டு சீட்டு உறை மீது எழுதியுள்ள வரிசை எண்ணும் வேறுபட்டு இருந்தால், தள்ளுபடி செய்யலாம். உறுதிமொழி படிவத்தை, தனியாக உறைக்குள் வைக்காமல், ஓட்டு சீட்டுடன் சேர்த்து சிறிய உறைக்குள் வைத்திருந்தாலும் தள்ளுபடி செய்யலாம்.ஓட்டு சீட்டை 'படிவம் ~ 13பி'க்குள் வைக்காமல், தனியே வைத்திருந்தாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு ஓட்டளித்திருந்தாலும், போலி ஓட்டு சீட்டு என்றாலும் தள்ளுபடி செய்யலாம்.
கொரோனா பரவல் எதிரொலி - ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!
சேதமாகி, முற்றிலும் கிழிந்த மற்றும் கசங்கிய நிலையிலோ உள்ள தபால் ஓட்டுகளையும் தள்ளுபடி செய்யலாம். இவற்றை தள்ளுபடி செய்ய தேர்தல் நடத்தும் அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews