12 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா..? ஒத்திவைப்பா..? நாளை முதல்வர் முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 11, 2021

1 Comments

12 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா..? ஒத்திவைப்பா..? நாளை முதல்வர் முடிவு

12 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா..? ஒத்திவைப்பா..? நாளை முதல்வர் முடிவு எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி
Capture
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் முந்தைய நாளின் கொரோனா பாதிப்பை விட ஆயிரம் பேர் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறாயிரம் என்பதும் குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து ஏற்கனவே ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழகத்தின் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்தும் ஆலோசனை நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குறித்து நாளைய முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களின் ஆலோசனை கேட்ட பின்னர் முதல்வர் இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து நாளைய முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டம் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே கூட்டணி கட்சியின் தலைவரான டாக்டர் ராமதாஸ் அவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84730484