தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை போல நடப்பாண்டும், பிளஸ் 2 தவிர, மற்ற வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் 4 ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில், நேற்று காலை திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு வந்து, தேர்வெழுதும் வகையில் அமர்ந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தேர்வு நடப்பதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. விரைந்து சென்ற மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதில், சம்பந்தப்பட்ட பள்ளியில் நடப்பாண்டு 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பிளஸ் 1 சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நடைபெறுவது தெரியவந்தது.
இறைச்சி, மீன் கடைகளை சனிக்கிழமையும் மூட உத்தரவு.
இதுகுறித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே, மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, நுழைவுத்தேர்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாணவர்கள் வந்து நுழைவுத்தேர்வு எழுத தயாராக இருந்தது தெரிய வந்தது. பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட சிஇஓ கணேஷ்மூர்த்தி, மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து தேர்வு எழுத வந்த மாணவர்கள்,பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தில் அஞ்சலகங்கள் செயல்படும் நேரம் குறைப்பு!
பள்ளிகள் மீது நடவடிக்கை
இதுகுறித்து சிஇஓ கணேஷ்மூர்த்தி கூறுகையில், ‘‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி வேறு எந்த காரணங்களுக்காகவும், மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுவதாக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.