தமிழகத்தில் கற்போம் எழுதுவோம் இயக்கம் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த இயக்கம் ஜூலை மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள படிக்காதவர்களுக்கு எழுத்தறிவுக் கல்வியை அளிக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் 15 ஆயிரத்து 823 கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் விடுமுறை கேட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தடுப்பு பணி
இந்த மையங்களில் கற்றல் பணிகளை தொடர வேண்டும். மேலும், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் பயன்பெற்று வரும் நபர்கள் தொடர்ந்து பயன்பெறும் வகையில் இந்த திட்டத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடங்கள் 26ம் தேதி முதல் மாலை 7 மணி முதல் 7.30 மணி வரை தினமும் ஒளிபரப்பப்பட உள்ளன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.