புதுக்கோட்டை, ஏப்.22 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கொரோனா பெருந் தொற்றின் அதிவேக பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் அங்கன்வாடி பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரையிலான அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங் களும் மூடப்பட்டு வீட்டில் இருந்து பணி என்ற அடிப்படை யில் செயல்படுகிறது. பள்ளியில் மாணவர்கள் இல்லாத நிலையில், பள்ளிக்கு ஆசிரியர்கள் அன்றாடம் வந்துபோவது தேவையற்ற வகையில் பல்வேறு வகையான சச்சரவுகளை, விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
அரசு பள்ளி கட்டடம் புதுப்பிக்க ஆய்வு
இத்தகைய நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் உடனடித்தீர்வுகள் காணப்படுவதே சிறந்த நிர்வாக முறையா கும். கொரோனா பெருந்தொற்று பரவல் வேகத்தினை கணக் கில் கொண்டும், கடந்த கல்வி ஆண்டுகளின் பள்ளி இறுதி வேலை நாளினை கவனத்தில் கொண்டும், கோடை வெயி லின் உக்கிரத்தையும், உளவியல் ரீதியான கோடைக்கால விடுமுறையையும் சீர்தூக்கிப் பார்த்து தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்து இணையவழியில் பணியாற்றி டும் வகையில் தமிழக அரசு வழிவகைசெய்திட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.