ஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 22, 2021

Comments:0

ஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு

கல்வி நிறுவனங்களுக்கு சென்று படித்த காலம் கனவாக மாறும் வகையில் தற்போது பள்ளி, கல்லூரி பாடங்கள் மற்றும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாய்ப்புகள் மிகுந்த டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பு, இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனத்தால், ஆன்லைனில் வழங்கப்படுகிறது. ஆம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - சென்னை, புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸில் ஆன்லைன் பி.எஸ்சி., பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. முக்கியத்துவம்
கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், தகவல் அறிவியல் போன்ற துறைகளின் பயன்பாட்டுடன், கொட்டி கிடக்கும் தகவல்களை ஒழுங்குபடுத்துதல், பகுப்பாய்தல், அவற்றை முறையாக பயன்படுத்துதல் என பல நிலைகளை உள்ளடக்கியுள்ளது, டேட்டா சயின்ஸ் துறை!
ஆன்லைன் வாயிலாக, உணவுப் பொருட்கள், வாடகை வாகனம், சேவை பயன்பாடுகள் என பல்வேறு பணிகளையும் ஆன்லைன் வாயிலாக இன்று நாம் எளிதாக நிறைவு செய்து கொள்கிறோம். இந்த கட்டமைப்புக்கு பின்னால் உதவுவது ‘டேட்டா சயின்ஸ்’. எளிதான பயன்பாடு முதல் உயர் ஆராய்ச்சிகள் வரை அனைத்திலும் ‘டேட்டா சயின்ஸ்’ பங்கு மிக அவசியம். மேலும், ஏராளமான நிறுவனங்களிலும் இத்துறை சார்ந்த நிபுணர்களின் தேவை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி., ஆன்லைன் வாயிலாக, புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் சான்றிதழ், டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பை வழங்குகிறது. படிப்புகள்:
பவுண்டேஷனல் சர்ட்டிபிகேட்
டிப்ளமா இன் புரொகிராமிங்
டிபளமா இன் டேட்டா சயின்ஸ்
பி.எஸ்சி., இன் புரொகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ்
சேர்க்கை நிலைகள்:
ரெகுலர் என்ட்ரி மற்றும் டிப்ளமா என்ட்ரி என இரண்டு முறைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ரெகுலர் என்ட்ரி முறையில் சேர்க்கை பெறுபவர்கள், படிப்படியாக புவுண்டேஷன், டிப்ளமா நிலைகளை நிறைவு செய்து இறுதியாக பி.எஸ்சி., பட்டத்தை பெறலாம். டிப்ளமா என்ட்ரி முறையில் சேர்க்கை பெறுபவர்கள் டிப்ளமா பட்டத்தை மட்டுமே பெற முடியும். டிப்ளமா படிப்பு, வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அடிப்படைகளை அறிந்தவர்களுக்காக வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க தகுதி:
10ம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலத்தை படித்திருக்க வேண்டும். மேலும், மூன்றாண்டு டிப்ளமா படிப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த படிப்பை இரண்டாம் பட்டமாக தொடரலாம். பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் சேர்க்கை பெறலாம். வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை
குவாலிபயர் 1, பவுண்டேஷன், குவாலிபயர் 2 மற்றும் குவாலிபயர் 3 ஆகிய தேர்வுகள் வாயிலாக, தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவற்றிற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் மாறுபடும். தகுதியானவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு: www.onlinedegree.iitm.ac.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews