பிளஸ் 2 வினாத்தாள், 'லீக்' ஆகாமல் தடுக்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 24, 2021

Comments:0

பிளஸ் 2 வினாத்தாள், 'லீக்' ஆகாமல் தடுக்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

'பிளஸ் 2 வினாத்தாள், 'லீக்' ஆகாமல் தடுக்க, அனைத்து மாவட்டங்களிலும், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, மே, 5ல் பொதுத் தேர்வு நடப்பதாக இருந்தது. கொரோனா பரவல் தீவிரம் காரணமாக, பொதுத்தேர்வு நடத்தும் தேதி, கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், பொதுத் தேர்வு நடத்து வதற்கான பெரும்பாலான ஏற்பாடுகளை, அரசு தேர்வுத்துறை விரைந்து முடித்து விட்டது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலனுக்காக அமேசான் கிண்டிலில் ஆடியோ புத்தகங்கள் இலவசம் - அமேசான் அறிவிப்பு.
தேர்வு எழுதுவதற்கான முகப்புத்தாள், வெற்று விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கும்; வினாத்தாள் கட்டுகள், மாவட்ட கட்டுக்காவல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், அவற்றை பூட்டி, 'சீல்' வைத்து பாதுகாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தம்'
வெற்று விடைத்தாள் மற்றும் வினாத்தாள் வினியோகிக்கப்பட்ட இடங்களில், வினாத்தாள்கள் வெளியே கசிந்து விடாமலும், திருட்டு போகாமலும் பாதுகாக்க வேண்டியுள்ளது.மேலும், விபத்துகள் ஏற்படாத வகையில், 24 மணி நேரமும், போலீஸ் பாதுகாப்பும், சுழற்சி முறையில் பள்ளி கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பும் மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews