கொரோனா பரவல் காரணாமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2020 ஜனவரி 9ம் தேதி முதல் கூடுதல் அகவிலைப்படி நிவாரணம் நிறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி (DA) நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு இருந்த நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"COVID-19 awareness" - PDF
அகவிலைப்படி நிறுத்தம்:
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. வரிவசூல் குறைந்ததால் அரசுக்கு வருவாய் பாதிக்கப்பட்டது. எனவே செலவினங்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாத சம்பளத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2021 முதல் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த அறிவிப்பினால் மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஜூலை 1 இல் அகவிலைப்படி வழங்கப்படும் பொழுது 28 சதவீதம் உயர்வு இருக்கும் என நிபுணர்கள் கூறி இருந்தனர்.
"Corona Aathichudi" - PDF
இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 9ம் தேதி முதல் இந்த DA நிவாரணம் நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.