தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி அளிக்க வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
ஊழியர்களுக்கு தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. நாள் ஒன்றிற்கு 15,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கையாக அரசு இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளில் உள்ள ஊழியர்களும் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் மட்டும் பிற ஊழியர்களும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக காவல் துறை, முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுப்பணி துறையினர் போன்றோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துத்துள்ளனர். இந்த ஊழியர்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழக அரசின் தலைமை செயலாளர் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளார். மேலும் மாநில அலுவகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையம் விதிமுறைகளையும் பின்பற்றுவது குறித்த முன்னேற்ற அறிக்கையினை 30.04.2021க்குள் அனுப்ப வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விரும்பியவர்களை மட்டும் தடுப்பூசி போடச் சொல்லி அறிவுறுத்தலாம். கட்டாயப்படுத்துவது அவசியமற்றது. ஏனெனில் தடுப்பூசியே தொடர்ந்து மேம்படுத்தப்பட்டே தான் வருகிறது. நாளாக நாளாகத் தான் தடுப்பூசியே முழுமை பெறும்.
ReplyDelete