மதுரை, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வித் திட்ட தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கவும், அதை நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
ஆசிரியர்களுக்கு மானிய ஊதியம் தொடர்ந்து பெற்றுத்தர 2.50 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கைது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில், தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டிற்கு போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி ஒருவரை நியமித்து, 6 மாதத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பிறகு, குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.