12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு –கேரள மாநில கல்வித்துறை அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 27, 2021

Comments:0

12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு –கேரள மாநில கல்வித்துறை அறிவிப்பு!!

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 28ம் தேதி நடக்க இருந்த 12ம் வகுப்பு தொழிற்கல்வி செய்முறை தேர்வுகளை கொரோனா தொற்று காரணமாக தற்போதைக்கு தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
TNPSC - AGRICULTURAL OFFICER (EXTENSION) (TAMIL NADU AGRICULTURAL EXTENSION SERVICE) (Answer keys) செய்முறை தேர்வுகள் தள்ளிவைப்பு: கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் 21,890 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்ததால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 17ம் தேதி நடக்க இருந்தது. அதனால் தேர்தல் ஆணையத்திடம் பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி, ஏப்ரல் 8 முதல் 29ம் தேதி வரை 10ம் வகுப்பு தேர்வுகளும், ஏப்ரல் 8 முதல் 28ம் தேதி வரை 12ம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்பட அறிவிக்கப்பட்டது. மாற்றப்பட்ட அட்டவணையின் படி தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் வியாழக்கிழமை அன்று தேர்வுகள் முடிவடையும். 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி முடிவடையும் நிலையில், ஏப்ரல் 28ம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் நடக்க இருந்தது. இதை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போதைக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews