அமராவதி: கரோனா தொற்றின் முதல் அலைக்கு பிறகு ஆந்திராவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை வழக்கம் போல் செயல்படுகின்றன. இதேபோன்று கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்குகின்றன
தற்போது கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறித்து ஆந்திர கல்வி அமைச்சர் ஆதிமூல சுரேஷ் நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நமது மாநிலத்தில் பள்ளி கல்லூரிகள் கரோனா நிபந்தனைகளுடன் இயங்கி வருகின்றன ராஜமகேந்திரவரம் பகுதியில் தனியார் கல்லூரியில் படிக்கும் 168 மாணவ, மாணவியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மற்ற மாணவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல் எந்தவொரு பள்ளி, கல்லூரியிலும் மாணவர்களிடையே கரோனா தொற்று பரவினால் நிர்வாகத்தினரே பள்ளி, கல்லூரியை மூடிவிடலாம். இதில் அலட்சியமாக செயல்படும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்
ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 984 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Sunday, March 28, 2021
மாணவர்களுக்கு கரோனா அதிகரித்தால் பள்ளிகளை மூட ஆந்திர அரசு அனுமதி
STUDENTS
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.