பிளஸ் 2 மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை, மே மாத இறுதி முதல் நேரடியாக நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக் கான இலவச பயிற்சி, 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டு வரு கிறது.
இதற்கிடையே கரோனா பரவலால் நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த நவம்பர் முதல் இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் இணையவழியில்
நடத்தப்பட்டு வருகின்றன பயிற்சி வகுப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து, உண்டு உறைவிட வசதிகளுடன் ஒரு மாதம் வரை அரசு சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 முதல் 21-ம் தேதி வரை நடை பெற உள்ளது. இந்த தேர்வு முடிந்தபின் இணையவழியிலும், நேரடி முறையிலும் நீட் பயிற்சி அளிக்க கல்வித்துறை தற்போது முடிவு செய்துள்ளது
அதன்படி மே இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் முழுவதும் கரோனா பாதுகாப்பு வழிமுறை களை பின்பற்றி நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டு பணி கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வும், இதற்காக இணையவழி யிலான குறுந்தேர்வுகள் அடிப் படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .
Sunday, March 28, 2021
நீட் தேர்வுக்கான நேரடி சிறப்பு பயிற்சி மே மாதத்தில் தொடங்க திட்டம்
Training
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.