மத்திய அரசின் கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' பதிவு, நாளை துவங்க உள்ளது.
மத்திய அரசின் கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். மற்ற வகுப்புகளில் காலியிடங்கள் இருந்தால் மட்டும், அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் சேர்க்கப்படுவர். வரும் கல்வி ஆண்டுக்கான ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை, கே.வி.சங்கதன் அமைப்பு அறிவித்து உள்ளது.
அதன்படி, மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நாளை துவங்கு கிறது. ஏப்., 19க்குள் பதிவை முடித்து கொள்ள வேண்டும்.சேர்க்கைக்கு தகுதியான மாணவர்களின் தற்காலிக பட்டியல், ஏப்., 23ல் அறிவிக்கப்படும். இறுதி மாணவர் பட்டியல், ஏப்., 30லும்; காலியிடங்களுக்கான சேர்க்கை பட்டியல், மே, 5லும் வெளியிடப்படும் என, அறிவிக்கப் பட்டு உள்ளது.
தபால் ஓட்டு பதிவிட்டதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் கைது
சேர்க்கைக்கான காலிஇடங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறை, இட ஒதுக்கீடு போன்ற கூடுதல் விபரங்களை, https://kvsangathan.nic.in/announcement என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சேர்க்கைக்கான காலிஇடங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறை, இட ஒதுக்கீடு போன்ற கூடுதல் விபரங்களை, https://kvsangathan.nic.in/announcement என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.