அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள், அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தேர்தல் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டு, அரசு பணிகளை நடுநிலையுடன் கவனிக்க வேண்டும் என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் பின்னும், ஆசிரியர்கள் பலர், சமூக வலைதளங்களில், சில கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில், ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சட்டசபை தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தலைமை ஆசிரியர் முதல் அலுவலக பணியாளர்கள் வரை அனைவரும், நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, நடுநிலையுடன் பணியாற்ற கடமைப்பட்டவர்கள்.எனவே, சமூக ஊடகங்கள், சங்கங்கள் வழியாக, அரசியல் கட்சிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ விமர்சனம் செய்வது, ஓட்டு சேகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது, நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.
கும்பகோணம் மேல்நிலை பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று..!
ஆசிரியர்களும், கல்வி துறை ஊழியர்களும், ஓட்டு சேகரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, ஆதாரத்துடன் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.