தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதிய கால அவகாசம் தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதிய கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சொந்த தொகுதிக்கு வெளியே தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு மின்னணு மூலம் வாக்களிக்க அனுமதி தர இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சொந்த தொகுதிக்கு வெளியே உள்ளவர்கள் தபால் வாக்கு மூலம் மட்டுமே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கிய முக்கிய அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 3 நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி அறிவிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளின் சுவர்களை அசிங்கப்படுத்தாதீங்க...ப்ளீஸ்! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் 2021 - வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி அளித்தல் - தேர்தல் பணி ஒதுக்கீடு செய்து உத்தரவிடல் - தொடர்பாக - PDF
அரசுப்பள்ளிகளின் சுவர்களை அசிங்கப்படுத்தாதீங்க...ப்ளீஸ்! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் 2021 - வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி அளித்தல் - தேர்தல் பணி ஒதுக்கீடு செய்து உத்தரவிடல் - தொடர்பாக - PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.