வாரந்தோறும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுமா? தமிழக அரசு தீவிர ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 08, 2021

Comments:0

வாரந்தோறும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுமா? தமிழக அரசு தீவிர ஆலோசனை

ஆசிரியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாநில அரசு ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது வாரந்தோறும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுமா? தேர்தல் பயிற்சியால் ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கை தமிழக அரசு தீவிர ஆலோசனை; விரைவில் நல்ல செய்தி
உதவித்தொகை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தில் கொரோனா நெருக்கடிக்கு பின்னர் உரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட ஓராண்டு மாணவர்கள் வீட்டிலேயே இருந்து கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சோர்வுற்று கிடந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு புதிய உற்சாகத்தை அளித்தது. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
NET EXAM - விண்ணப்பிக்க நாளை (மார்ச் 9) கடைசி நாள்!
ஆண்டு இறுதித் தேர்விற்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதாவது, 9, 10, 11ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே 12ஆம் வகுப்பிற்கு மட்டும் தான் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் 9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
உதவித்தொகை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
தற்போது வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியானது. அதன்படி, மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாவதால் அதன்பிறகு பொதுத்தேர்வு நடத்துவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. ஆசிரியர்களும் வழக்கம் போல் தங்கள் பணிகளைக் கவனிக்கலாம். ஆனால் தேர்விற்கு முன்பாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரையிலான காலகட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். இதனால் மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க முடியாத சூழல் ஏற்படும். அதேசமயம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் பயிற்சி அளிக்கப்படுவதால் ஆசிரியர்களுக்கான விடுமுறை பாதிக்கப்பட்டுள்ளது.
NET EXAM - விண்ணப்பிக்க நாளை (மார்ச் 9) கடைசி நாள்!
இதன்மூலம் வாரத்தின் 7 நாட்களுக்கு வேலைப் பளு இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே வாரத்தில் ஒருநாள் எங்களுக்கு ஓய்வு வேண்டும். அதற்கேற்ப ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுமுறை விட வேண்டும் என்று மாநில அரசிடம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews