உதவித்தொகை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 08, 2021

Comments:0

உதவித்தொகை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளிக் கல்வி இணை இயக்குனர் செய்திக்குறிப்பு:
WALK-IN INTERVIEW - 08-03-2021 (Monday) - POSTS: Professors, Associate Professors, Assistant Professors
மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பள்ளி அல்லது அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வுத் திட்டம், டில்லி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தேர்வு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட நான்கு பகுதிகளில் (புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம்) வரும் 28ம் தேதி நடக்கிறது. இத்தேர்வின் மூலம் 125 மாணவர்கள் தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும், ஜாதி, மண்டல அடிப்படையிலும் தேர்வு செய்து 9ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: இயக்குநர் தகவல்!
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தங்கள் பள்ளியின் மூலம் nmmsntspdy.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் வரும் 10ம் தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews