தஞ்சாவூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 19, 2021

Comments:0

தஞ்சாவூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் சுமார் 2 லட்சத்து 75ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
UGC Public Notice regrading: Extension of date for submission of theses for terminal M.Phil/Phd. Students
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வாரை 9 பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த 14 சுகாதாரக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. அதன் மூலம் 439 பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 93 பேருக்கும் மற்றும் ஆசிரியர்கள் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள 439 பள்ளிகளில் 9,10,12-ம் வகுப்பு பயிலும் 2லட்சத்து 75ஆயிரத்து 185 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ள மாவட்ட நிர்வாகம் அதற்காக 14 கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews