9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மீண்டும் லீவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 21, 2021

Comments:0

9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மீண்டும் லீவு!

தமிழகத்தில், பள்ளிகள் வாயிலாக தொற்று பரவலை தடுக்க, 9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, நாளை முதல் மீண்டும், 'லீவு' விடப்பட்டுள்ளது. 'மறு உத்தரவு வரும் வரை, பள்ளிகள் கிடையாது' என, அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் பட்டியல் நாளை வெளியீடு: தோ்வுத்துறை
மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, சட்டிஸ்கர், டில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில், கொரோனா நோய் பரவல் துவங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவாமல் தடுக்கவும், 16, 17ம் தேதிகளில், பல்வேறு துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில் நடந்தது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்தவும், அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் பட்டியல் நாளை வெளியீடு: தோ்வுத்துறை
அபராதம்
அதன்படி, கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டது. தற்போது தினசரி, 50 ஆயிரம் சோதனைகள் என்பது, 75 ஆயிரமாக யர்த்தப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவாமல் தடுக்க, நோய் பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள், அடையாளம் காணப்படுகின்றன. மூன்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது, உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதி, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத, 24 ஆயிரத்து, 700 பேர் மற்றும் நிறுவனங்களுக்கு, 52.64 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 20 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இதை அதிகப்படுத்த, 3,217 இடங்களில், தடுப்பூசி போடப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் பட்டியல் நாளை வெளியீடு: தோ்வுத்துறை
இந்நிலையில், தொற்று பரவலை தடுக்க, பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜன., 19 முதல், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் துவக்கப்பட்டன. பிப்., 8 முதல், 9 மற்றும், 11ம் வகுப்புகளை திறக்கவும், அனுமதி அளிக்கப்பட்டது. பள்ளி விடுதிகளும் திறக்கப்பட்டன. சில நாட்களாக, தஞ்சாவூர் மாவட்டத்தில், பள்ளிகளில் தொற்று பரவல் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஓரிரு மாவட்டங்களில், சிறிய அளவில், பள்ளிகளில் தொற்று பரவல் உள்ளது. பள்ளிகளில் ஏற்பட்டுள்ள, கொரோனா கூட்டு தொற்றால், அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பரவி, பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, பொது சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதை உடனடியாக தடுக்கவும், கொரோனா நோய் தொற்றால், மாணவர்களும், பெற்றோரும் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், நாளை முதல், மறு உத்தரவு வரும் வரை, அனைத்து பள்ளிகளிலும், 9, 10, 11ம் வகுப்புகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், இந்த வகுப்புகளுக்கான, 'ஆன்லைன்' வகுப்புகள் தொடர்ந்து நடக்கும். மாநில கல்வி திட்டம் தவிர, பிற கல்வி திட்ட பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, அறிவிக்கப்பட்டபடி நடக்கும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும், அனைத்து நடவடிக்கைகளும், அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில், பொது மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில், 45 வயது முதல், 59 வயதுக்குட்பட்ட, இணை நோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், சுகாதாரப் பணியாளர்கள், இதர முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நோய் தொற்று அறிகுறி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள, அரசு மருத்துவமனையை அணுகி, சிகிச்சைப் பெற வேண்டும். கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews