பொறியியில் கல்லூரிகளில் பணிபுரியும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தார்களா ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 26, 2021

Comments:0

பொறியியில் கல்லூரிகளில் பணிபுரியும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தார்களா ?

பொறியியில் கல்லூரிகளில் பணிபுரியும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தார்களா என்று அண்ணா பல்கலை அதிகாரிகள் சந்தேகம் எழுப்புகின்றனர். 2021-22 கல்வி ஆண்டுக்கு அங்கீகாரம் பெற அண்ணா பல்கலைக்கழகத்தில் 510 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்தன. அதில், சுமார் 9.500 ஆசிரியர்கள் பிஎச்டி பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகளை தடுப்பதற்காக, ஆசிரியர்கள் பட்டம் பெற்றபல்கலைக்கழகத்தில் இருந்துஉண்மைத் தன்மை சான்றிதழ்களைபெற்று, அதையும் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்குமாறு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைஏற்கெனவே அறிவுறுத்தியது. இந்நிலையில், சுமார் 6 ஆயிரம் ஆசிரியர்களின் பிஎச்டிசான்றிதழ்கள் மட்டுமே உண்மைத் தன்மை சான்றிதழுடன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், உண்மைத் தன்மை சான்றிதழ் அளிக்காத 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலியான பட்டம் மூலமாக பணியில் சேர்ந்துள்ளனரா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் சிலர் கூறியதாவது:
உண்மைத் தன்மை சான்றிதழ் அளிக்காததாலேயே போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக அர்த்தம் இல்லை. கரோனாபரவலுக்கு இடையே, பல்கலைக் கழகங்களிடம் உண்மைத் தன்மை சான்றிதழ் கோரும்போது, ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.1,000-க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. தவிர, பெரும்பாலான ஆசிரியர்கள் அண்ணா பல்கலையில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். அதன்உண்மைத் தன்மையை அண்ணாபல்கலையே ஆராயலாம். ஆனால்,அதற்கும் கல்லூரிகள் கட்டணம்கட்ட நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றன. இதனால்தான், பல கல்லூரிகள் தங்கள் ஆசிரியர்களின் பிஎச்டிபட்டத்துக்கான உண்மைத் தன்மை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே, ஆசிரியர்களின் பிஎச்டி பட்டத்துக்கான உண்மைத்தன்மை சான்றிதழை ஏப்ரல் 30-க்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews