தமிழகத்தில் பள்ளி மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா – ஆன்லைன் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!
மத்திய அரசு பணிகளில் சேர விருப்பமுள்ளவர்களுக்காக நடத்தப்படும் செட் (CET) தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். CET தேர்வுக்கான அறிவிப்பு: மத்திய அரசு பணிகளில் சேர பலர் கனவுடன் காத்திருக்கின்றனர். அதற்காக பல தேர்வுகளில் விண்ணப்பித்து அதற்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்காக மத்திய அரசு ஒரு அருமையான வாய்ப்பினை வழங்கியுள்ளது, அதில் மத்திய அரசு பணிகளில் சேர விருப்பமுள்ளவர்களுக்கு செட் தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த அறிவிப்பு விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய ஆள்தேர்வு முகமை இதனை அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி குரூப் சி மற்றும் குரூப் பி பிரிவுகளில் வேலைக்கு செல்ல விருப்பமுள்ளவர்களுக்கு செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் கூடிய தேசிய ஆள்தேர்வு முகமை உருவாக்கப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுத் தகுதித் தேர்வுகளான பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி), ரயில்வே வாரியங்கள் (ஆர்.ஆர்.பி) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) போன்றவை தேசிய ஆட் தேர்வு முகமையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா – ஆன்லைன் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!
இந்த ஆன்லைன் தேர்வு அறிவிப்பு மூலமாக போக்குவரத்து வசதி இல்லாத தொலைதூர இடங்களில் உள்ள தேர்வர்களும், பெண் தேர்வர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும் என இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.