Breaking

Tuesday, March 16, 2021

சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ படிப்புகள்முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை

சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகள் இனி முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – கல்லூரி 3 நாட்களுக்கு விடுமுறை!!
இது குறித்து இணைச் செயலா் சுரேந்தா் சிங் ஐசிஏஐ அமைப்புக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பு (ஐசிஏஐ), இந்தியக் கம்பெனிச் செயலா்கள் கல்விக் கழகம் (ஐசிஎஸ்ஐ), இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் தாங்கள் வழங்கும் சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகளை முதுநிலைப் படிப்புகளுக்கு இணையாக கருத வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தன. இது குறித்து யுஜிசி சாா்பில் நடைபெற்ற 550-ஆவது கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் படி சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகள் இனி முதுநிலைப் படிப்புகளுக்கு இணையாகக் கருதப்படும்.
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டின் நிலை? – பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து 1 வருடம் நிறைவு!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog