அண்ணா பல்கலை துணை பதிவாளர் கைது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 03, 2021

Comments:0

அண்ணா பல்கலை துணை பதிவாளர் கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக, 3.28 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அண்ணா பல்கலை துணை பதிவாளரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுதல் - தினசரி அறிக்கை வழங்க கோருதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்!
சென்னை, அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும், குரோம்பேட்டை எம்.ஐ.டி., துணை பதிவாளராக பணியாற்றி வந்தவர் பார்த்தசாரதி, 59.இவர், ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த இளங்கோவன் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்டோரிடம், பள்ளிக் கல்வி, பொதுப்பணித் துறை மற்றும் மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக, 3.28 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.இதற்கு பார்த்தசாரதியின் மகன் விஷ்வேஸ்வர் உள்ளிட்ட ஒன்பது பேர் துணையாக இருந்து உள்ளனர். இந்த மோசடி குறித்து, 2019ல், இளங்கோவன் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, விஷ்வேஸ்வர் மற்றும் அவருடன் இடைத்தரகர்களாக செயல்பட்ட, சென்னையை சேர்ந்த ஆறுமுகம், ராஜு, ராஜபாண்டி ஆகியோரை கைது செய்தனர்
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு வழக்கு: மத்திய, மாநில அரசுகள் மீது திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டின் இன்றைய உத்தரவு
விசாரணையில், பார்த்தசாரதி உள்ளிட்ட மோசடி கும்பல், இளங்கோவன் உள்ளிட்டோருக்கு போலி பணி நியமன ஆணைகள் வழங்கி, கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது தெரியவந்தது. இந்த வழக்கில் பார்த்தசாரதி, நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் ரவீந்திர ராஜா, வள்ளி இளங்கோ உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews