1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – உத்தரபிரதேச மாநில அரசு அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 10, 2021

Comments:0

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – உத்தரபிரதேச மாநில அரசு அறிவிப்பு!!

உத்தரபிரதேச மாநில அரசு நடப்பு ஆண்டில் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் இறுதி தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
சட்டசபைத்தேர்தல் 2021- பள்ளிக்கல்வித்துறை - தேர்தல் வகுப்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் முழுமையாக பங்கேற்க ஆணையிடல் மற்றும் தேர்தல் வகுப்புகளுக்கு சட்டசபை வாரியாக தொடர்பு அலுவலர்கள் (NODAL OFFICERS) நியமித்தல் - சார்பு - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்- 10.03.2021 கொரோனா பாதிப்பு:
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் பள்ளி படிப்பில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகளை கூட பள்ளிகள் நடத்தவில்லை. மேலும், தேர்வு இல்லாமல் மாணவர்களை அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.
சட்டசபைத்தேர்தல் 2021- பள்ளிக்கல்வித்துறை - தேர்தல் வகுப்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் முழுமையாக பங்கேற்க ஆணையிடல் மற்றும் தேர்தல் வகுப்புகளுக்கு சட்டசபை வாரியாக தொடர்பு அலுவலர்கள் (NODAL OFFICERS) நியமித்தல் - சார்பு - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்- 10.03.2021
உத்தரபிரதேச மாநிலத்தில் கல்வி வாரியங்களின் படி, மொத்தம் 1.59 லட்சம் பள்ளிகள் உள்ளது. இதில், சுமார் 1.6 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய கல்வி ஆண்டு நடப்பு ஆண்டில் ஜூலை மாதத்தில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடங்கியது. கல்வி வாரியத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. .உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டது. கல்வித்துறையின் அறிவிப்பு:
இந்நிலையில் அடிப்படைக்கு கல்வித் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ரேணுகா குமார் அவர்கள்,” 2021ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு முறையிலான மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடத்தப்படாது. உத்தர பிரதேச அரசு 100 நாள் பிரேர்னா கயனோட்சவ் என்ற திட்டத்தின் படி செயல்படுகிறது. மாணவர்கள் வகுப்பு வாரியாக மதிப்பீடு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக இதன் மூலம் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews